BAMCEF UNIFICATION CONFERENCE 7

Published on 10 Mar 2013 ALL INDIA BAMCEF UNIFICATION CONFERENCE HELD AT Dr.B. R. AMBEDKAR BHAVAN,DADAR,MUMBAI ON 2ND AND 3RD MARCH 2013. Mr.PALASH BISWAS (JOURNALIST -KOLKATA) DELIVERING HER SPEECH. http://www.youtube.com/watch?v=oLL-n6MrcoM http://youtu.be/oLL-n6MrcoM

Welcome

Website counter
website hit counter
website hit counters

Sunday, March 17, 2013

இந்தியா தமிழ்நாடு ஆரம்பமாகும் திமுக நாடகம் ....வீணாகுமோ மாணவர் தியாகம் !

இந்தியா தமிழ்நாடு ஆரம்பமாகும் திமுக நாடகம் ....வீணாகுமோ மாணவர் தியாகம் !

Photobucket
மாணவன் நினைத்தால் நடதிக்காட்டுவான் ...என்பது மீண்டும் தமிழகத்தில் நிரூபணமாகி உள்ளது . அவர்கள் போராட்டத்தை கையில் எடுத்தப் பிறகுதான் இன்றைக்கு காங்கிரஸ் கட்சியும் அதன் நண்பேண்டா தி .மு க வும் மாணவர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர பல நாடகங்களை தொடங்கியுள்ளது .

வழக்கம் போல் கலைஞரின் கூட்டணி அஸ்திரத்தை கண்டு கொள்ளாமல் இருந்த காங்கிரஸ் தற்போது கலைஞரை சந்திக்க சென்னை ஓடிவருகிறது . மீண்டும் அறைக்குள் வைத்து கலைஞர் ஸ்பெக்டரம் பூதம் காட்டி காங்கிரஸ் கட்சியால் மிரட்டப்படுவாரா ? அல்லது வரும் தேர்தலில் இருவரும் பிரிந்துபோக முடிவு செய்வார்களா என்று மாலை தெரியும் .

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் .இவர்கள் சந்திப்பு முடிந்துடன் கலைஞர் பத்திரிக்கையாளர்களை சந்திப்பார் .. வழக்கம் போல் உயர்நிலை கூடி முடிவு எடுக்கும் என்று சொல்லுவார் . உப்பு சப்பு இல்லாத அமெரிக்க தீர்மானத்தில் சில நாடக வரிகள் சேர்க்கப்பட்டு இந்தியா ஆதரிக்கும் என்று முடிவு செய்யப்படும் ! எந்தக்காரணம் கொண்டும் இலங்கையை இந்தியா எதிர்காது ..அதே போல் தீ .மு கவும் காங்கிரஸ் கட்சியை விட்டு வராது .

ஈழத்தை அழித்த இரண்டு கட்சிகளும் தனிமை பட்டால் பெரும் சேதாரம் வரும் தேர்தலில் ஏற்படும் என்பது இரண்டு கட்சிகளுக்கும் தெரியும் .நம் வருத்தம் எல்லாம் மாணவர்களின் தியாகம் வீணாகிவிடுமோ என்பதுதான் .இதை தடுக்க ஒரே வழி பொது மக்களாகிய நாம் மாணவர்களுக்கு ஆதரவாக களத்தில் போராட இறங்கவேண்டும் .


கலைஞரை பற்றியோ ஜெயலலிதா பற்றியோ கவலைப்படாமல் நாம் கோடிக்கணக்கில் ஒன்று சேர்ந்து காங்கிரஸ் அரசை பனியவைப்பதை தவிர வேறு வழில்லை . இந்த அற்புதமான வாய்ப்பு மீண்டும் ஒருமுறை வரவே வராது ! நண்பர்களே தயவுசெய்து இதை பகிரவும் ...மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கவும் .

இலவச மின் புத்தகங்கள்


வாகை தமிழரின் உரிமைக்குரல்

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...